Thursday 5 April 2012

நிபந்தனை




சில உடன்படிக்கைகளில் ஒரு மாத முன்னறிவிப்பு தரவேண்டும் என்னும் நிபந்தனை இடம் பெறுகிறது. 

இது ஆங்கில ஆட்சியால் தான் புகுத்தப்பட்டிருக்கும்; ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது வியப்பு தருகிறது. 

அசோக வனத்தில் சீதை தன்னிடம் விடை பெற்ற அனுமனிடம் கெடு விதித்தாள்:

இன்னும் ஒரு மாதம் காத்திருப்பேன்; அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிடில் உயிர் துறப்பேன் என அவனிடம் கூறு என்பது அவள் கட்டளை. 

" இன்னம் ஈண்டுஒரு திங்கள் இருப்பல்யான்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் ......." 

( இன்னம் இங்கு ஒரு மாதம் இருப்பேன் நான். பின்பு உயிர் தரிக்கமாட்டேன்) 

கம்பர் - யுத்த காண்டம் - சூடாமணிப் படலம்.

1 comment:

  1. நிபந்தனை பற்றி நூற்றாண்டுகள் முன்பே இலக்கியம் காட்டுவது மிகவும் வியப்புக்குரியதுதான். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete