Tuesday 10 April 2012

லத்தினின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்



(கொலோசியத்தில் காணப்படும் லத்தீன் கல்வெட்டு.
படம் உதவி : இணையம்)


பழங்காலத்திலேயே லத்தினுக்கு எழுத்து கிடைத்துவிட்டது. செய்யுள் இயற்றத் தேவையான அடி ஒன்றும் இருந்தது 

உரைநடையிலும் செய்யுளிலும் சிற் சில சிறு படைப்புகள் பிறந்தன; ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான சிறந்த இலக்கியம் உருவாகவில்லை. 

காரணம், ரோமானியர்க்குக் கற்பனை வளம் இல்லாமை. கிரேக்கரது தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களுடைய  இலக்கியங்களிலிருந்து உந்துதல் (Inspiration ) பெற்றுப் பலப்பல சொந்தப் படைப்புகளை எழுத்தாளர்கள் தோற்றுவித்தார்கள். 

அவற்றை அப்படியே மொழிபெயர்க்காமல் அல்லது தழுவாமல் ஒரு புது உத்தியைப் பயன்படுத்தினர். 

வெவ்வேறு மூலங்களிலிருந்து அங்கே கொஞ்சம் , இங்கே கொஞ்சம் என எடுத்து இணைத்துச் சொந்தச் சரக்கும் சேர்த்து  நூல் எழுதினர். பல்வேறு இலக்கிய வகைகள் அறிமுகமாகிச் சிறந்த புத்தகங்கள் வெளியாகி மொழிக்குச் செழுமை சேர்த்தன. 

முக்கிய படைப்பாளிகளைத் தெரிந்துகொள்வோமா? 

நாடகம்: என்னியுஸ்பிளவுத்துஸ். 

கவிதை: ஹொராசியுஸ்,  ஒவிதியுஸ். 

அங்கதக் கவிதை: யுவெனாலிஸ், லுசிலியுஸ். 

இதிகாசம்: வெர்ஜிலியுஸ். 

தத்துவம்: சிசரோ. 

வரலாறு: ஜூலியஸ் சீசர், சலுஸ்த்தியுஸ், தித்துஸ் லிவியுஸ். 

இலக்கணம்: வர்ரோ. 

ரோம் பேரரசு தென் ஐரோப்பா முழுதையும் அடிப்படுத்தியதால் பலவேறு மொழி பேசும் மக்களின் தொடர்பு ஏற்பட்டுப் பிறமொழி, சிறப்பாய் கிரேக்க மொழிச் சொற்கள் வரம்பின்றிக் கலந்து லத்தினின் தூய்மையைக் கெடுத்தன. சில எழுத்தாளர் இரு மொழியிலும் எழுதினர்வேறு சிலர், தாய்மொழியைப் புறக்கணித்துக் கிரேக்க மொழி மட்டும் பயன்படுத்தினர். 

இவ்வாறு லத்தின் சிறிது சிறிதாய்ப் புழக்கம் குறைந்து பின்பு மறைந்தே போயிற்று.

3 comments:

  1. தகவலுக்கு நன்றி!
    http://senthilgauthaman.blogspot.com

    ReplyDelete
  2. இத்தனைச் சிறப்புப் பெற்ற லத்தீன் மறைந்தது மிகவும் வருத்தம் தரும் செய்தி. லத்தீன் இலக்கியம் பற்றி அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. "பலவேறு மொழி பேசும் மக்களின் தொடர்பு ஏற்பட்டுப் பிறமொழி, சிறப்பாய் கிரேக்க மொழிச் சொற்கள் வரம்பின்றிக் கலந்து லத்தினின் தூய்மையைக் கெடுத்தன. சில எழுத்தாளர் இரு மொழியிலும் எழுதினர்; வேறு சிலர், தாய்மொழியைப் புறக்கணித்துக் கிரேக்க மொழி மட்டும் பயன்படுத்தினர்."

    லத்தீன் மறைந்ததற்கான காரணங்களிலிருந்து தமிழர்களாகிய நாம் பாடம் கற்க வேண்டும். நாமும் இதே போல் ஆங்கிலத்தைத் தலைக்கு மேல் வைத்துப் போற்றித் தமிழை உதாசீனம் செய்கிறோம். ஆங்கில வார்த்தைகளை வரைமுறையின்றி உரையாடலில் பயன்படுத்துகிறோம். தமிழ் தொடர்ந்து வாழ வேண்டுமானால் நம் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது.
    லத்தீன் பற்றிப் புது செய்திகளை அறிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete