Monday 13 August 2012

என்னதான் முடிவு? - ஒருநிமிடக் கதை




அறிமுகம் ஆகிச் சில நாளிலேயே அவர் என்னைத் தேடிவந்தார்.  

உங்களிடம் ஒரு யோசனை கேட்கவேண்டும். 

 எதைப் பற்றி? 

என் பையனைக் கல்லூரியில் சேர்ப்பது குறித்து.. 

 அதில் என்ன பிரச்சினை? 

பொறியியலில் சேர்ப்பதா, மருத்துவத்தில் சேர்ப்பதா? 

 மகனின் விருப்பத்தைக் கேட்டீர்களா? 

 அது அப்புறம்; முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். 

பொறியியலைத் தான் நிறைய பேர் விரும்புகிறார்கள்: அமெரிக்கா போகலாம், அதிகம் சம்பாதிக்கலாம். 

ஊகூம், அவனைப் பிரிந்திருக்க என்னால் முடியாது. 

உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும். 

ஆனால் சமுதாயத்தில் மதிப்பு இல்லையே! டாக்டர் என்றால் தெய்வம் போல. 

அது மெய்தான்; மகனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துங்கள். 

அதிலே பாருங்கள், நோய் முற்றி இறந்தாலும் தவறான சிகிச்சை என்று குற்றம் சுமத்தி நிம்மதியைக் கெடுப்பார்கள். 

சாதக பாதகம் எதிலும் உண்டு. முடிவுக்கு வருவது கடினம்தான். மகனைக் கேளுங்கள். 

 பதில் சொல்லக்கூடிய நிலையில் அவன் இப்போது இல்லை. 

ஏன்? அவனுக்கு என்ன?  

ஒன்றுமில்லை, நன்றாய்த்தான் இருக்கிறான். 

 பின்னே? 

 மூன்று வயதுதான் ஆகிறது. மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.

???????

3 comments:

  1. ஹி!

    சபாஷ்!
    நல்ல திருப்பம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆவலாய் படித்து வந்தேன்...

    முடிவில்... ஹா... ஹா... எதிர்ப்பார்க்கவேயில்லை ஐயா...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 1)


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete
  3. இறுதித் திருப்பத்துடன் கூடிய மிகவும் சுவாரசியமான கதை. இது கதையா அனுபவமா என்று எண்ணத் தோன்றும் வகையில் உள்ளது எடுத்துக்கொண்ட கரு. பாராட்டு.

    ReplyDelete