Wednesday 18 March 2015

அயல் நாட்டுத் தாவரங்கள்



   தாவர  இயல்  அறிஞர்  கு. வி. கிருஷ்ணமூர்த்தி,   தமது  "தமிழரும் தாவரமும்என்னும் ஆராய்ச்சி நூலில் எந்தத் தாவரங்கள்  எவ்வெந்நாடுகளிலிருந்து எப்போது தமிழகத்துள் நுழைந்தன  என்ற  விவரங்களை  வழங்கியுள்ளார்முக்கியமானவற்றை இங்கே  பகிர்கிறேன்:

எண்
தாவரம்

நாடு
காலம்
1.
கடலைப்  பருப்பு  

இத்தாலி
கி.மு.5
2.
இஞ்சி             
           
வட கிழக்கு  இமயம் 
கி.மு.1
3.
வெற்றிலை , பாக்கு

மலேசியா            
கி.பி.1
4.
ஆல  மரம்  

வட  இந்தியா          
புத்தர்  காலம்
5.
அரச  மரம் 

இமயமலை அடிவாரம்
மேற்படி
6.
மஞ்சள்       

சீனா
தெரியவில்லை
7.
தென்னை

பிலிப்பைன்ஸ்
கி.பி.2
8.
பவழ மல்லிகை 

வட இந்தியா
கி.பி.7
9.
கேழ்வரகு

ஆப்பிரிக்கா
கி.பி.10
10.
துளசி

இத்தாலி, பிரான்ஸ்
கி.பி.12
11.
இலவ மரம்

ஆப்பிரிக்கா
கி.பி.12
12.
புளிய மரம்

மேற்படி
கி.பி.14
13.
மிளகாய்                                  

மெக்சிக்கோ
கி.பி.16
14.
கொய்யா மரம்

பெரு
கி.பி.16
15.
புகையிலை

அமெரிக்கா
கி.பி.16
16.
முந்திரி

தெரியவில்லை
கி.பி.16
17.
தக்காளி

அமெரிக்கா
கி.பி.17
18.
உருளைக் கிழங்கு 

சிலி
கி.பி.17
19.
வெங்காயம்

ஆப்கானிஸ்தான்
கி.பி.17
20.
முள்ளங்கி

சீனா
கி.பி.17
21.
ஆரஞ்சு

சீனா
கி.பி.17
22.
வேர்க்கடலை           

மத்திய அமெரிக்கா
கி.பி.19
23.
காப்பி

எத்தியோப்பியா
கி.பி.19
24.
மரவள்ளி

தென்னமெரிக்கா
கி.பி.19
25.
கிராம்பு

பசிபிக் தீவுகள்
கி.பி.19
         
(குறிப்பு -  1: பழங்காலத்தில்  தமிழர்   புளி  பயன்படுத்தி  இருக்கிறார்கள்அது  கோரக்கர்    புளி  எனப்படும்;   மேற்கு  மலைத்  தொடரில்  விளைகிறது.

குறிப்பு - 2: லெமூரியா  என்ற  குமரி  கண்டம்  பற்றிச்   சில தமிழறிஞர்    கூறிவரும்   செய்திகள்   அறிவியலாதாரம்  அற்றவை   என  இலக்கியச்    சாரலில்  லெமூரியா  என்னும்  தலைப்பில்  தெரிவித்திருந்தேன்;   அதற்கு  இந்நூல்  வலு  சேர்க்கிறது ;   பக் .  12  -- 15.)

**************************
(படம் இணையத்திலிருந்து எடுத்தது)

Thursday 5 March 2015

என்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை


   

ஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள்  ஒருவர்   என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில்  சிலவற்றைத்  தமிழில் பெயர்த்திருக்கிறார்  கீதா மதிவாணன் .  என்றாவது  ஒரு நாள்  என்னும் தலைப்புடன்  வெளிவந்துள்ள  அந்தச்  சிறுகதைத் தொகுப்பு நூலை விரிவாய்த் திறனாய்ந்த  இரு  கட்டுரைகள்  இணையத்தில் இடம்  பெற்றிருக்கின்றன.  என் பங்குக்கு,  நூல் பற்றிய என் கருத்துகளைப்  பதிகிறேன்.

   ஒரு நூற்றாண்டுக்குமுன்பு, ஆத்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட ஆங்கிலேயக்  கைதிகள்தங்களுக்குச் சிறிதும்  பழக்கமில்லாத, புத்தம்புதிய, அடிப்படைக்  கட்டமைப்பு  அறவே இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளாகி  அனுபவித்த இன்னல்களை  ஆசிரியர் திறம்படச்  சித்திரித்துள்ளார்.

  கதைமாந்தர்  கீழ்மட்ட மக்கள், ஏழைகள்; ஆயினும் கடின உழைப்பு, கடமையுணர்ச்சி, பாசம்,  அறைகூவல்களை  எதிர்கொள்ளும்  துணிச்சல் முதலான  நற்பண்பு உடையவர்கள்; சிறுவர்களும் குடும்பப் பாரத்தை மனமுவந்து சுமக்கிறார்கள்!  ஆயினும்,  பொறுப்பற்ற போக்கு,  தன்னலம், பகையுணர்வு சிலரிடம் காணப்படுகின்றன. தம் வாழ்வில் ஆசிரியர் அனுபவித்த துன்பங்கள் தந்த  பட்டறிவுகதை மாந்தரையும் சூழ்நிலையையும் துல்லியமாய்ச்  சித்திரிக்கப்  பெருமளவில் உதவியிருக்கும்.

   அக்கம்பக்கம் மனித  சஞ்சாரமற்ற  தனிமைச்  சூழ்நிலைவிரக்திக்கு எளிதில்  இட்டுச் செல்லக்கூடியதுஆயினும்   இவர்களில் யாரும்,    "என்ன வாழ்க்கை இது? இப்படி  உழல்வதைவிட, இறந்து போவது  மேல்என்று  எதிர்மறையாய்ச் சிந்தியாமை  போற்றற்குரியது.

     லாசனின் சுவை நிரம்பிய எழுத்துக்கு ஒரு காட்டு:  புதர்க்  காடுறை பூனைகள்;  அவருடைய  எழுத்தாற்றலைப்  பக்கம் 65 பறை  சாற்றுகிறது: வாசகரின் உள்ளம்  நெகிழுமாறு வறியவரின் அவல நிலையை அது விவரிக்கிறது.

  மொழிபெயர்ப்பு: இப்போதைய ஆத்திரேலிய ஆங்கிலம் இங்கிலாந்துக்காரர்களுக்கே விளங்குவது கடினம் என்பர்; அப்படியிருக்க, முற்காலஒரு கலப்புக் கொச்சை மொழியைப் புரிந்து மொழிபெயர்ப்பது என்பது  அறைகூவல் நிறைந்த  பணி. மூல ஆசிரியரின் கருத்து, நடை, உத்தி ஆகிய மூன்றையும்  அப்படியே வாசகர்க்கு வழங்குவதே சிறந்த  பெயர்ப்பு எனப்படுகிறது. அதில்  பாராட்டுக்குரிய விதத்தில்  வெற்றி பெற்றிருக்கிறார்  பெயர்ப்பாளர்;  சனியன், புண்ணியமாய்ப் போகட்டும், பாழாய்ப்போன   முதலிய   சில சொற்றொடர்கள் மட்டும்   தமிழ்ச் சாயலைத்  தோற்றுவிக்கின்றன; மூலத்தில் இப்படி  இருக்காது எனக் கருதுகிறேன்.


   கீதா மதிவாணனின்  எழுத்துப் பணி மேன்மேலும்  சிறக்கட்டும்!