Saturday 3 October 2015

எப்பொருள் யார்யார்வாய் ....


   
  ஒரு  வேந்தன்  அதிகாலைத்  துயில்  எழுந்ததும்  உப்பரிகையின்  பக்கம்   வந்து நந்தவனத்தின்பால்  பார்வையைச்  செலுத்தியபோது,  அவனுடைய   கண்களும் அங்கு அண்ணாந்து, வாய் பிளந்தபடி, அரண்மனையை நோக்கிக்கொண்டு  நின்ற கந்தல் உடைக்காரன் ஒருவனின் கண்களும் சந்தித்தன; அரசன் அருவருப்புடன் தலையை சட்டெனத் திருப்பியபோது  சுவரில்  இடித்துக்கொண்டான்.

     அவனது  ஆணைப்படி அந்த  ஏழையைப்  பிடித்துக்  காவலில்   வைத்தனர்.

      தர்பார்  கூடும்   வேளை   வந்ததுஅவனை  இழுத்து வந்து  நிறுத்தினர்

     அரசன்,   "எதற்காக  அரண்மனையின்  முன்  நின்றாய்உன்  முகத்தில்  நான்  விழித்ததால்  என்  நெற்றியில்  காயம் பட்டது.  இப்படி எத்தனை  பேருக்கு உன்னால் துன்பம் நேர்ந்ததோ? நேரப்போகிறதோநீ  வாழக்கூடாதுஉன் தலையை  வெட்ட உத்தரவு இடப் போகிறேன். கடைசி  ஆசை  இருந்தால்  சொல்என்று  கடுங்குரலில்   கோபத்துடன்  கூறினான்.

      அவன்  பதில்  இறுத்தான்:

 "மன்னரேஆசை எதுவும் இல்லை. ஒரேயொரு கருத்து  மட்டும்  சொல்லவேண்டும்அனுமதியுங்கள்"

        " சரி, சொல்."

   "அரசே,  என்னால்  நீங்கள் பட்ட காயத்துக்கு  வருந்துகிறேன்;  என்  முகத்தில் விழித்த உங்களுக்குத் தலையில் காயம்; ஆனால் உங்கள்  முகத்தில்  விழித்த  எனக்குத்   தலையே  போகிறது!"

    வார்த்தைகள் மன்னனின் மனத்தில் சுரீரென்று குத்தினஅறிவு  தெளிவடைந்தது.


                                             ///////////////////////////
(படம் : நன்றி இணையம்)

6 comments:

  1. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான வரவேற்புக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. முன்னரே வாசித்திருக்க்கிறேன்...
    மறுபடியும் வாசிக்கும்படி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? நிறைய வாசிப்பீர்கள் போலிருக்கிறது . இதுதானே என அலட்சியப்படுத்தாமல் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. ஹா ஹா ஹா! அறிவு தெளிவடையச் செய்யும் நல்ல சூடு! படித்து ரசித்த கதைகளைத் தொடர்ந்ஹு பகிர்ந்துவருகின்றமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்து கருத்து எழுதுவதற்கு மிகுந்த நன்றி .

      Delete